Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA



6:38 PM

காதல் கவிதை...

Posted by Maideen

நான் அழகாயிருக்கும்
தருணங்களில் என்னை
அணைத்துக் கொ(ல்)ள் என்றேன்....

நீயோ என்னை
அணைத்துக் கொண்டேயிருக்கிறாய்....
நான் எல்லாத் தருணங்களிலும்
அழகாயிருக்கிறேன் என்று.....

****

இதயமெல்லாம்
ஏந்திக் கொண்டுருக்கிறாய் என்னை

இருந்தும் இன்னும் கொஞ்சம்
யாசிக்கிறேன் உன்னை ஏன்?

****

நான் உன்னை நேசிக்கத் தான் செய்கிறேன்
நீயோ என்னைத் தான் சுவாசிக்கிறாய்!!!!!
****

உன் கண்ணாடி கன்னத்தில்
எப்போதும் தெரிவது
என் முகம்...

****

உன் காதோர மச்சம்
நான் எச்சில் படுத்த ஏங்குகிறது...

***

என்னிடம் சில்மிஷம் செய்து
செல்லமாய் குத்தும்
உன் மீசை இப்போது missing..
eventhough me always kissing...

****

உன் உதடுகள் செய்த
ஊழ்வினை பயன்

என் உதடுகளால்
அதற்கு எப்போதும் தண்டனை!!!!

****

அரசன் நீ என அறிந்தும்
நான் அரசி என ஆணவமிட்டேன்

நீயோ உன் அரியாசனத்தின் அருகில்
எனக்கு சரியாசனமிட்டு

உன்னையாள என்னை
அழைப்பாய் என அறியாமல்

நான் அரசி என ஆணவமிட்டேன்.....

கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே

வந்துவிடுகின்றன எறும்புகள் என்று

சலித்துக்கொள்கிறாய் நீ

அவற்றுக்குத்தானே தெரியும்

அவை வெறும் கோல மாவு அல்ல

ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...



நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...


மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen