Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA


வெறும் காகிதமாய் இருந்த என் வாழ்க்கையில்
சித்திரம் வரைந்த ஓவியனானாய் !!
வெறும் பாறையாக இருந்த என் வாழ்க்கையில்
சிற்பம் செதுக்கிய சிற்பியானாய் !!
வெறும் வரிகளாக இருந்த என் வாழ்க்கையில்
இசை கொடுத்த கலைஞனானாய் !!
இவ்வாறு என் வாழ்க்கையை
ஒவ்வொரு நிலையிலும் பரவசம்
அடைய செய்த என் உயிர் தோழர்களே
தங்களுக்கு
எனது அன்பும் நன்றியும் கலந்த
" நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் "

9:14 PM

சரித்திர காதல்

Posted by Maideen

மெல்லிய கருவரையாய் திகழ்ந்தாயே.....
எனவே தான்,
உன் மீது காதல் வசப்பட்டவர்கள்
பல கோடி...
இருப்பினும்,
நீ காதல் வசப்பட்டதோ
சில லட்சம் மீது தான்...
இதனாலேயோ என்னவோ
அவர்களை மட்டும் உன்னுடன்
அழைத்து சென்று விட்டாய்,
ட்சுனாமி என்னும் ஓர்
பெயரை கொண்டு!!!
இதன் பெயரால் நீ
சரித்திரத்தில் இடம் பிடித்தாய்...
ஆனால் காதல் மோகத்தால்,
உன் பல லட்ச காதலர்களின்
பார் புகழெய்தும் கனவுகளை
சிதறல்களாய் சிதறி விட்டாயே.....


பெய்யாத மழையின் சாரலில் நநைந்தேன்!
சுடாத வெயிலின் அனலில் எரிந்தேன்!
ஓடாத அருவியின் பெருக்கில் நீந்தினேன்!
மலராத மொட்டின் ஸ்வாசத்தில் மிதந்தேன்!
ஆம் இவ்வனைதிலும் நான் மகிழ்ந்தேன்...
ஆனால் அனைத்தையும் உணர்ந்தேன்,
இவையாவும்,
மாயையின் விளையாட்டென்று
கண்விழித்தப் பிறகே நான்.....


பேசியதோ, கேட்டதோ, கண்டதோ எதுவாக இருப்பினும்...
அன்பு கலந்த புன்னகையுடனும், அரவணைத்த அந்த கைகளின் மேன்மையுடனும்
தன் செல்லப் பெயரை கேட்க்கும் இந்த தருணமே
அனைத்தையும் மறக்க செய்தனவே.......
இத்தனை வலிமை கொண்டதோ பாசம் !!!!!!!!!

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen