மனசப் பறிகொடுத்தேனே...- என்
மனசப் பறிகொடுத்தேனே...
பக்கம் வந்த தென்றல்
பார்த்து என்னை சிரிக்க.
முத்தம் தந்த நிலவு.
முல்லைப் பூவாய் மாற.
நெஞ்சுக்குள்..... பூ வாசம்.
கண்ணுக்குள்..... உன் வாசம்.
உதடுகள் விரிவதால்..... கனவுகள் மலர்ந்திடும்.
உதடுகள் குவிவதால்..... நினைவுகள் துளிர்த்திடும்.
உலகைச் சுற்றி... உலா வர...
நீயும் நானும்... பறவையாய் மாறிடுவோம்.
தரணி எங்கும்... தமிழ் மணம் வீச...
நீயும் நானும்... தவம் இருப்போம்.
உறவுகள் இணைவதால்...... திருமணம் மலர்ந்திடும்.
உணர்வுகள் பிணைவதால்..... பிளவுகள் மறைந்திடும்.
கடலைச் சுற்றி... உலா வர...
நீயும் நானும் மீனாய் மாறிடுவோம்.
கண்டு வந்த... புதுமைதமை...
நீயும் நானும்... எடுத்து உரைப்போம்.
வரவுகள் வருவதால்... செல்வங்கள் பெருகிடும்.
வருடங்கள் போவதால்... வயதுகள் மறைந்திடும்
விண்ணைச் சுற்றி... உலா வர...
நீயும் நானும் விண்மீனாய் மாறிடுவோம்.
வேறு கோளில்... வாழ விரும்பினால்...
நீயும் நானும்... வாழ்ந்து காட்டுவோம்...
The Islamic Development Bank Scholarship.
-
*The Islamic Development Bank Scholarship.*
Patna: Islamic Development Bank (IDB), Jeddah has invited applications for
scholarship cum interest-free educati...
14 ஆண்டுகள் முன்பு