சமூகமே....
எங்களுக்கு
ஏன் இந்த அவலம்?
உன் பார்வை
எங்கள் மீது மட்டும்
ஏன் வீசுகிறது அமிலம்?
சம்பளம் அதிகம் என்கிறீர்கள்...
இரவும் பகலும் விழித்து
சில ஆயிரம் வாங்கும்
எங்களை
ஆத்திரம் தீர திட்டுகிறீர்கள்!
ஒன்றுமே செய்யாமல்
பல கோடி வாங்கும்
ஹீரோக்களுக்கு
ஆரத்தி எடுத்து வரவேற்கிறீர்கள்!
நாங்கள் வரி கட்டி
சம்பாதிப்பதை
எங்களிடமிருந்து
வரி கட்டாமல்
சம்பாதிபவர்களே அதிகம்!
வரி கட்டியது தவறா?
இல்லை
பல பேர்
எங்களால் வாழ்ந்தது தவறா?
தொலைகாட்சியில்
எங்களை
கேலி பொருளாகவும்
பாவங்களை சுமக்கும்
பாவிகளாகவும் பாவித்தீர்கள்!
சினிமாவில்
இன்னும்
ஒரு படி மேலே போய்
கொலையும் செய்தீர்கள்!
எங்களால் மட்டுமே
கலாசார சீரழிவு
என சொல்லி
எங்கள் முகமூடியை போட்டு
நீங்களும்
கலாச்சாரத்தை கொஞ்சம் சீரழித்தீர்கள்!
ஊடகங்கள்
எங்களை
ஊனம் ஆக்கியது!
மக்களிடமிருந்து
எங்களை
தூரம் ஆக்கியது!
அப்படி
என்ன தவறு செய்தோம்?
தகவல் தொழில்நுட்பம்
என்னும்
அறைக்குள்ளே
சிறையானோம்!
அதனால்
கவிஞனின்
கவிதைக்கு
இரையானோம்!
எங்களை உன்
கவிதைக்கு
உணவாக்கி
உண்டு கொழிக்கும்
கவிஞனே!
நாங்கள்
என்ன தவறு செய்தோம்?
சரிந்தது பொருளாதாரம்!
விழுந்தது தகவல் தொழில்நுட்பம்!
நேற்று வாங்கிய
முழு சம்பளம் போய்
இன்று வாங்கும்
அரை சம்பளம் கூட
நாளை கிடைக்குமா?
என தெரியாமல்
பாதாளத்தில் விழுந்து விட்டோம்!
கை கொடுத்து தூக்காமல்
சுற்றி நின்று
கை கொட்டி சிரிக்கிறீர்கள்!
அந்நியனுக்கு தான்
வேலை செய்கிறோம்
நாங்கள்
அந்நியன் இல்லை!
சகோதிரன் கூட
சதிகாரனாக பார்கிறான்!
என்ன தவறு செய்தோம்?
கணிணியை
தொட்டதை தவிர
என்ன தவறு செய்தோம்?
The Islamic Development Bank Scholarship.
-
*The Islamic Development Bank Scholarship.*
Patna: Islamic Development Bank (IDB), Jeddah has invited applications for
scholarship cum interest-free educati...
14 ஆண்டுகள் முன்பு