என்னை போல் நண்பனை தொலைத்த நண்பர்களுக்காக
என் காதலி கூட
இதயத்தை எதிர்பார்த்தல்
எதையும் எதிர்பார்க்காமல்
இருந்தான்
என் நண்பன்! தாய் வழி சொந்தமோ?
தந்தை வழி சொந்தமோ?
இல்லை
ஆனாலும் பழகினோம்
மாமா மச்சான் என்று! அறுசுவையும் அற்பமே
என் நண்பன் சொல்லும்
நகைச்சுவை முன்னால்! இரவுக்கு துனையாக
கதை பேசிவிட்டு
வகுப்பில்
தூங்கிக் கொண்டிருந்தோம்! அதனால்தான்
பரிச்சையில் திருதிருவென
விழித்துக் கொண்டிருந்தோம்!
ஆபத்தில் கைகொடுப்பான்
நண்பன்
semester exam இல்
அவன் கொடுத்த
பிட் இல் தெரிந்து கொண்டேன்! மைதானங்கள்
மிரண்டுபோகும் அளவுக்கு
அடித்துக் கொள்வோம்! அலை அடித்தல்
கடலுக்கு வலிக்குமா என்ன? மறு கணமே
தோல் மேல் கைபோட்டு
அணைத்துக் கொள்வோம்! கணக்குப் பார்த்து வாழ்ந்தது இல்லை
ஆனாலும்
ஞாபகப் படுத்திக் கொண்டிருப்பான்
canteen முதலாளி! நான்கு வரியில் அசத்தும்
ஹைக்கூ போல வந்தாய்! பாட்டி சொன்ன கதை போல்
சட்டென முடிந்து விட்டாய்!
busy என்னும்
ஒற்றை வரியில்
நம் வாழ்வை
துளைத்து விட்டோம்! அனுப்பும்
forward மெயில்லும்!
எழுதும்
நட்பு கவிதையும்!
பார்க்கும்
நண்பன் பெயர்களும்! தேடிப் பிடித்து
கொண்டு வரும்
நண்பன் முகத்தை! வறண்ட பாலைவனத்தில்
ஈரத்தை காட்டிவிட்டு
சென்றுவிட்டாய்
இன்றும்
உன்னை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஈரம் காயாமல்! அன்று
கையில் காசு இல்லை!
ஆனாலும்
நட்பு பாராட்ட நீ இருந்தாய்! இன்று
கை நிறைய காசு
பை நிறைய credit card debit card
ஆனாலும்
எதுவும் நட்பு பாராட்டவில்லை
உன்னை போல்!
எனக்கு
எல்லாத்தையும் கொடுத்து
இல்லாதவனாய்
ஆகிவிட்டது IT!

கண் விழித்த உடன்
ஏனடா கண் விழித்தோம்? என்று இருந்தது! "இறைவா
இன்று ஒரு நாள்
என்னை குருடனாக்கி விடு! இல்லை என் நாள் குறிப்பில்
இந்த நாளை இல்லாமல் ஆக்கி விடு!"என்றேன் கண் முன்னே இறைவன்
அடடா!
இப்போதல்லாம் இறைவன்
instant coffee போல் ஆகிவிட்டார்! "என்ன வரம் வேண்டும்" என்றார்! "காதலர் தினத்தை கொண்டாட
ஒரு காதலி வேண்டும்" என்றேன்! "சரி எனக்கு
காதலர் தினம் எப்படி இருக்கும் காட்டு" என்றார்! இருவரும் நடக்க தொடங்கினோம்! ஒரு பக்கம்
கையில் ரோஜாவுடன்
காதலர்கள்! மறு பக்கம்
கையில் கருப்பு கொடியுடன்
அரசியல்வாதிகள்! இடையில்
என்னை போலவும்
சில பேர்! காதலர்களின் சுவாசத்தை
சுவாசித்த பலூன்கள்
தெருவெங்கும் துள்ளி விளையாடியது! காதலி இல்லாத
என்னை பார்த்து பரிசு பொருள்கள்
பரிகாசம் செய்தது! பூக்கள் எல்லாம்
பொக்(க)கை வாய் காட்டி சிரித்தது! கடற்கரை,விடுதி,கிழக்கு கடற்கரை சாலை
எங்கும்
காதலர் தினம் கண்ணைப் பறித்தது! இறைவா!
இதற்குத்தான் என்னை குருடாக்க சொன்னேன்! இன்று பூத்த பூக்கள்
தன்னை காதலர்களுக்கு அர்பணித்து! இறைவன் கூட
அலங்காரம் இன்றி நடந்து வந்தார்! இன்று
ஒவ்வொரு வண்ணத்திற்கும்
ஒரு கதை இருக்கிறது! நானோ வண்ணங்கள் அறியாது
கருப்பு வெள்ளையாகவே
இருக்கிறேன்! சுதந்திர தினத்தில்
போர்வையை இழுத்து
போர்த்திக்கொண்டு தூங்கியவர்கள்! அதிகாலைலே விழித்துக்கொண்டு
கொண்டாடினர்
காதலர் தினத்தை! நல்ல விழிப்புணர்வு! அவன்
வாரி வாரி பரிசு கொடுத்தான்! அவள்
மாரி மாரி முத்தம் கொடுத்தாள்! french kiss,
german kiss
என கண்டம் விட்டு
கண்டம் தாண்டிகொண்டிருந்தது முத்தங்கள்! இந்தியாவிற்கும் எனக்கும்
அங்கு இடமில்லை! அடுத்து
pub--காதலர்கள் நிரம்பி வழியும் இடம்! இருட்டும் இல்லை!
வெளிச்சமும் இல்லை!
இரண்டிற்கும் இடையே
ஒரு நிலை இழையோடிக்கொண்டிருந்தது! ஒலி பெருக்கி
இசை என்னும் பெயரில்
என் காதை கிழித்துக்கொண்டிருந்தது! பண்பாடு
எங்களை போல்
ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தது! "கலாச்சார சீரழிவு" என்றார் இறைவன்!இந்த இருட்டில்
எங்கே பொய் கலாச்சாரத்தை தேடுவது? ஆதான் ஏவாள் காதல் கூட
கண்கள் தெரியும் வரைதானாட! மனிதா
நீ செய்யும் காதல்
வெறும் தேகத்தோடுதானாட! அங்கே உணர்ந்து கொண்டேன்!
பெண் ஒருத்தி இறைவனிடம்
"are you free?
shall we celebrate valentines day? " என்றாள்! இறைவனோ
"ஈஸ்வரா என்னைக் கப்பாத்து!"
என அலறியடித்து ஓடினார்! குருடனாக்கிவிடு என்றேன்
இறைவனோ
என் கண்ணை திறந்து வைத்து விட்டார்! காதலர்களே!
ஆடம்பர அலட்டல் கொண்ட
காதலர் தினம் எதற்கு? உள்ளத்தால் செய்யும் காதலுக்கு
ஒவ்வொரு தினமும் காதலர் தினமே!
Feb 14 - இந்நாளை
வெறுப்பவர்களுக்கு
என் ஆதங்கம்
அணைப்பவர்களுக்கு
என் கை குலுக்கல் அன்னையர் தினம்
தந்தையர் தினம்
நண்பர்கள் தினம்
எய்ட்ஸ் ஒழிப்பு தினம்
காதலர் தினம் காதல்தினம் என்ன பாவம் செய்ததோ!!
கவிஞர்களின் கவிதைகளுக்கு
பலியாகி சாம்பலாகிறது! உலகை படைத்த இறைவன்
மனிதனுக்குள் மனதிற்கு பதில்
மசாலாவை வைத்திருந்தால்
காதல் தோன்றிருக்காது
கவிதைகளும் பிறந்திருக்காது கவிஞனே உனக்கு காதலி
இல்லை - அது தான் குறை
காதலி இருந்தால்
காதல் இருந்தால்
Feb 14 - உன்னிடம்
உதை வாங்கி இருக்காது கடவுளின் கை பிடித்து
நாள் முழுதும் உலவி
ஒரு கேள்வி கேட்க மறந்த
என் அருமை கவிஞனே!! மனிதை படைத்த
கடவுளுக்கு
காதலை அழிக்கும்
சக்தி இல்லையா? பிரம்மனே உலகில் வந்து
காதலை கண்டு வியப்பது
எனக்கு வியப்பை தெளிக்கிறது! கண்டம் விட்டு கண்டம்
தாண்டும் fench kiss german kiss..!!
ஹ்ம்ம் .. கவிஞனே!!
உனக்கு காதலி இல்லை.. இருந்தால் தெரியும்
இந்திய முத்தங்களுக்கு
இங்கு இடமில்லை,
அதில் சுகமும் இல்லை என்று!! காதலர் தினம்
கலாசார சீர்கேடா??!! உனது நிறுவனத்தில் நடக்கும்
DJ night என்னும் கூற்றில்
colorful பறவைகளுக்கு நடுவில்
உன்னையும் பார்த்ததாக ஞாபகம்!!
காதல் சம்பலாகினால்லும்
மீண்டும் உயிர் பெற்று
உயர பறக்கும்
பீனிக்ஸ் பறவை! நான் சம்பல்லாகுவது
அழிப்பதற்கு அன்று
மீண்டும்
உயிர் பெற செய்வதற்கு!
உனக்கு காதலி இல்லை
அதனால்
முத்தத்தின் சுகம் அறிய வில்லை என்கிறாய்! காதலி இருந்தால்லும் கூட
கைகள் தாண்டும் சுகத்தை விட
கண்கள் தீண்டும் சுகம் பெரியது என்பேன்! காதலர் தினத்தை நான் எதிர்க்கவில்லை
அதை
கொண்டாடும் விதத்தை தான் எதிர்கிறேன்! எனகொரு காதலி இருந்தால் தினம் தினம்
காதலர் தினம் ஆகி இருப்பேன்!
நண்பா பிரம்மன் வியப்பது
அவன் படைத்த
காதலை கண்டு அல்ல!
அதை மாற்றி படைத்த
மனிதனை கண்டு! நண்பா நான் காதலர்களின்
தலையை கொய்பவன் அல்ல! உன்னை போல உண்மையான காதலர்களுக்கு
தலை வணக்குபவன்!
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது
4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
5. என்னதான் மீக்கு நீனுந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.
7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.
12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.
13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.
என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு ....
மூன்று நெருங்கிய நண்பர்களின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.
*
தாமதமானாலும்,
நான் வரும்வரை
காத்திருக்கிறாது காதல்.
தாமதமானதும்,
தேடிக்கொண்டு
வீட்டுக்கே வருகிறது நட்பு!
*
ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!
*
நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்
வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டிய
தண்ணீர் பாட்டில் முழுக்க நிரம்பியிருந்தது
நம் நட்பின் ஈரம்!
*
தினமும் பூப் பறித்து தருகிறது காதல்.
பூஞ்செடிக்கு நீரூற்றுகிறது நட்பு!
மனித இனத்தில்
தானும் பிறக்க எண்ணி
ஒவ்வொரு வீட்டிலும்
பிறந்தான் இறைவன்
அம்மாவாக.
எல்லோரும்
விழிக்கும் முன்பே விழித்து
சூடாக தேநீர் தருவாள்
அம்மா.
அந்தச் சுவையான தேநீருக்காகவே
தாமதமாக எழுவார்கள் பிள்ளைகள்.
கால்சட்டைப் பருவத்தில்
சிறுவன்;
மீசை முளைத்த பருவத்தில்
வாலிபன்;
காலம் வெவ்வேறு பெயர்களால்
அழைக்கிறது;
எப்பொழுதும் அம்மாவுக்கு
"சின்னக்குட்டி".
நட்சத்திரங்கள் எல்லாம்
கண்சிமிட்டி ரசிக்கிறது
அம்மாவின் தாலாட்டுப்பாடலை.
தூரலில் நனைந்தால்
துவட்டிக்கொள்ள துண்டாகும்;
கால் இடறி நகம் பெயர்ந்தால்
காயத்தை சுற்றிக்கொள்ள துணியாகும்;
அழுகின்ற பொழுதில் கண்ணீர்
துடைக்கும் கைகளாகும்;
உன் சேலைக்குத்தான் எத்தனை எத்தனை
உருவங்கள்.
வாழ்க்கை உன் மீது
சுமத்துகின்ற வலிகளுக்கெல்லாம்
புன்னகை மட்டுமே பரிசாய்
தருகின்ற வித்தை எங்கு கற்றுக்கொண்டாய்
அம்மா?
கருவில் என்னை
சுமந்த உன்னை
கருவிழியில் சுமந்திட
அனுமதிப்பாயா அன்னையே.