சின்ன கவிதை
என் மேல்
எழும்
என்னவளின் கோபம்
இலைகளின் தோன்றும்
காலை பனித்துளி

என் உயிரே...
உன் இமைகள்
பேசிய மொழியினில் - நான்
வார்த்தைகளற்று
ஊமையானேன்...
என் உயிரின் கலந்த உறவே
உன் முகம் தான் எனக்கு
ஆதவன் - நீயில்லாத
பொழுதேல்லாம் - எனக்கு
இருளில் தான் கழிகிறது...
அன்பனே
உமிழ் நீர் கூட
உன்னை கானாமல்
இறங்கமறுக்கிறது...
நீயும் நானும்
சந்தித்த அந்த
நந்தவ நாட்களில்
என் வசம் நானின்மையால்
நினைவுகளை தேடியலைவது நித்தமும்
என் சுவாசமகிறது....
வண்ணாத்து பூச்சியேன
உன் நினைவுகள்...
உன் கணவுகள்...
என்க்குள் சிறகடிக்கிறது...
கண்ணாளனே....
என் கண்ணில்
என் இதயத்தில்
நிறந்தவணல்ல - என்
ஆத்மாவில் கலந்தவன் - நீ
என்னபற்றிய
தேடல்களுக்கு
உன்னால் மட்டுமே
முன்னுரகளும்
முடிவுரைகளும்
எழுதபட வேண்டும்....
அன்பனே...
"காதல்" என்னும் மூன்ரெழுத்தில்
"பரிசு" நீ அளித்து
"கவலை" என்னும் மூரெழுத்தில்
"பிரிவு" தந்தது ஏன்...?
என் உயிரே...
உன் இமைகள்
பேசிய மொழியினில் - நான்
வார்த்தைகளற்று
ஊமையானேன்...
என் உயிரின் கலந்த உறவே
உன் முகம் தான் எனக்கு
ஆதவன் - நீயில்லாத
பொழுதேல்லாம் - எனக்கு
இருளில் தான் கழிகிறது...
அன்பனே
உமிழ் நீர் கூட
உன்னை கானாமல்
இறங்கமறுக்கிறது...
நீயும் நானும்
சந்தித்த அந்த
நந்தவ நாட்களில்
என் வசம் நானின்மையால்
நினைவுகளை தேடியலைவது நித்தமும்
என் சுவாசமகிறது....
வண்ணாத்து பூச்சியேன
உன் நினைவுகள்...
உன் கணவுகள்...
என்க்குள் சிறகடிக்கிறது...
கண்ணாளனே....
என் கண்ணில்
என் இதயத்தில்
நிறந்தவணல்ல - என்
ஆத்மாவில் கலந்தவன் - நீ
என்னபற்றிய
தேடல்களுக்கு
உன்னால் மட்டுமே
முன்னுரகளும்
முடிவுரைகளும்
எழுதபட வேண்டும்....
அன்பனே...
"காதல்" என்னும் மூன்ரெழுத்தில்
"பரிசு" நீ அளித்து
"கவலை" என்னும் மூரெழுத்தில்
"பிரிவு" தந்தது ஏன்...?
மறக்க முடியாத நினைவுகள்
நான் கவிதை எழுத வேண்டும் - என
நினைத்துவிட்தேன்...
ஏன் தெரியுமா...?
இந்த கவிதயாவது
ஒரு கமலத்தை
உன்னிடம் வெளிபடுத்தாதா?
நாம் சந்தித்த வேலையில்
உன் இனிய நினைவுகள்
என் ஆழ் மனதில் இடிமின்னல் போல் வந்த்து மறைந்தாலும் - நம்
இனிய நினைவுகள் என்னுள் வானமாய் நிலைத்து இருக்கிறது
உன் ச்ந்திப்பு - என்க்குள்
தந்த சிலிர்ப்பு - இன்னும்
மழைச்சாரலாய் என் மனதில்.....!
என் இதயம்
நிறைந்த - என்னவனே
உன் பார்வைகளின்
பரிமாறலின் - என்
பாதையே மாறியது
மறக்கமுடியுமா....?
உன்னோடு பேசும் வேளையில்
என்ன மறந்தேன்...
பலமுறை மடல் வறைந்து பதில் வராமல்
என் உணஎவை மறந்தேன்
உன்னையே நினைத்து என்
உறக்கத்தை மறந்தேன்
இவை அனைத்தயும் நான் மறந்தாலும்
உன் உறவை மட்டும் -
எத்துனை ஜென்மம் எடுத்தாலும்
மறக்கமுடியுமா?
மனித உடலுக்கு காந்த சக்தி உண்டு
என்னும் அறிவியலை
உன் கண்களிலால்
என்னை ஓப்பு கொள்ள செய்தவனே
ஒளியற்ற கண்களுடன்
நானிருப்பது புரியவில்லையா...?
எவையெல்லாம் இனியவையோ
அதில் மட்டும் உன் நினைவுகள் - எனக்கு
வருவதில்லை
கொடியவையிலும் வருகிறது....
நம் பிரிவகள் அளிக்கும் தவம் - திருமணவரம்
வேண்டி தவிர்க்க வைக்கிறது////
உன் நினைவுகளுடன் என் சுவாச கற்று...
ப்ரியங்களுடம் + தவங்களுடன்
உன்னவள்
முட்டை
உனக்கு ஜாதி , மதம்பேதமில்லை!
உள்நாட்டு ,வெளிநாட்டு என்ற மும்
உலக உணவுக்கே உகந்தவன் நீ
வெங்காயம்
காரணமில்லமலா இப்பெயர் பெற்றாய் !
என்னை காயமில்லமலே ,கண்ணீர் வரசெய்தாய்.
அம்மா
அம்மா உன் பெயர் அனைத்து பாஷையின் சங்கமம்!
ஒளி
சூரியனுகும் ஒரு ஒளி!
சந்திரனுக்கும்ஒரு ஒளி!
நட்சத்திரத்திற்கும் ஒரு ஒளி!
இரவு நம் வீடிற்க்கும் ஒரு ஒளி
மின்னடாம் பூச்சிக்கும் ஒரு ஒளி!
கடவுளுக்கும் உண்டு ஒரு ஒளி!
அதுகண்ணுக்கே புலபாத பெரோளி!
சிகரெட்
சிகரெட்விதவை கோலம் பூண்ட நீ!
என்னை ஏன் விதவை ஆகினாய்!
மழை!
கடவுள் குளித்தால் அது மழை!
மனிதன் குளித்தால் அது சாக்கடை!
புது கவிதை,வாங்க நாம புது கவிதை எழுதலாம்.
கவிதை என்பது நம் உள்ளத்துணர்வுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது என்பது என் கருத்து.
புது கவிதை எழுதுவது ரொம்ப புதுமையான,புரட்சியான,அனைவருக்கும் புரியும்படி,நட மொழியில் எழுதுவது.இதுவும் என் கருத்துதான்.
[நல்ல கவிதை எழுததெரிஞ்சவங்க எங்கிட்ட சண்டைக்கு வராதிங்க],
அதனால சிவாஜி படத்தில வாங்க பழகலாம் சொன்ன மாதிரி வாங்க நாம புது கவிதை எழுதலாம்.
சும்மயிருக்குபோது,அல்லது
எதவது பிடிக்காத வேலைசெஞ்சுட்டுயிருக்கும்போது யோசிங்க கட்டாயம் புதுகவிதை வரும்.
ஒரு பொருளையோ,பிடித்த நிகழ்வுகளையோ நினைங்க தானா வரும்.
ட்ரை பண்ணுங்க
இங்கே நீங்க எழுதுவதுதான் புதுகவிதை,ஆனால
சுட்டு எழுதகூடது இது கண்டிடன் ஒ.கேவா
மேலும் தமிழ்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என் anpana ஒரு வேண்டுகொள்
புதுகவிதை misuse செய்ய வேண்டாம் ப்ளீஸ்.............
எதோ எனக்கு தெரிஞ்ச புதுகவிதைகளை எழுதியிருகிரென்.
கவிதை பிடித்தால் எழுத்தவும்,பிடிக்காவிட்டால் கவிதையை மறந்துவிடவும்.
உப்பானது சாரமற்றுப் போனால். . .?
இனிப்பும் . . கசப்பும்
உரைப்பும். . புளிப்பும்
மாறி மாறி வரும்
வாழ்க்கையில்
கரிப்பு மட்டும்
தங்கும்-
கண்ணீராய். .
வியர்வையாய்.
எளியவனின்
கண்ணீரை
வியர்வையை
உணர்வதற்கே
உடலில் கரிப்பு.
உன்னில்
பொங்கும் இனிப்பால்
யாருக்கும் பலனில்லை.
உணர்வைக் கிளறிவிடும்
கரிப்பே
மனித நேயம்.
எனினும்
உப்பானது சாரமற்றுப்
போனால். . .
எதனால் சாரமேற்றுவாய்?
வண்ணத்துப்பூச்சி !!
பின்னால் எந்த வரலாறும் இதற்கு இல்லை
இது நொடிபோல் பிரிந்திருக்கிறது
தன்னைச் சுற்றியே சிறகடிக்கிறது.
இதற்கு நாளை என்பது இல்லை
தொடர்பில்லை நேற்றுடனும்
இது இன்றுகூட பலபொருள் காட்டி
மயக்கும் சிலேடையாய்.
சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி இது ..!
இந்த சோகமான மலைகளை வைத்திருக்கிறது
தன் இறகுக்குக் கீழேயே.
சின்னஞ் சிறு மஞ்சள் நிறமாய்
திறக்கிறது மூடும்முன், திறக்குமுன் மூடுகிறது
அட ..!!
எங்கே அது ..??.
உடன் பிறப்பு
தாயின் கருவறையில்
சேய்மையாய் பிறந்த உறவு
உதிரம் ஒன்றானாலும்
வாழ்க்கையில்
உதிரக் கூடாத உறவுகள்
சகோதரன் சகோதரி…
ஒன்றாய் பிறந்து
ஒன்றாய் வளர்ந்து
ஒன்றாய் வாழ்வதில்
சிலர்
ஒற்றுமை இழப்பதேன்…?
கருத்துக் கலப்பில்
கரையேராமல்
குருத்துவம் இழக்கும்
இவர்களின்
குருதி உறவுகள்…
அவசர வாழ்க்கைக்கு
ஆசைகள் அதிகம்
அதனால்
அனைத்து தேவைகளுக்கும்
ஆசிரியராவது சுயநலம்…
விட்டுக்கொடுப்பதற்கு
பொருள் இருந்தாலும்
உறவை வெட்டுவதற்கு
பலர்
பொருளாகிறார்கள்…
நீயா…? நானா…?
சுயநலக் களத்தில்
சூனியனர்களாகும்
ஒருதாய் வயிற்று பிள்ளைகள்…
கூடப்பிறந்தவர்களோடு
கூட்டாக வாழாதபோது
கூட்டாளிகளுடன் கூடுவதில்
குணம் நிறக்குமா…?
பக்கத்து வீட்டுக்காரனை
மன்னித்து விடும் மனம்
பாசக்காரனுக்கு அது கொடுப்பது
மரணதண்டனை…
பாசமும் அன்பும்
மதிப்புத் தெரியாதவர்களுக்கு
மத்தியில்
மரணமாகிக் கொண்டிருக்கிறது…
இது
தாய்பாலின் கலப்படமா…?
தாரம் தந்த பாடமா..?
யார் வகுப்பு நடத்தினாலும்
அங்கு
பாசம் குருவானால்
வேசக்கரு களைந்துவிடும்…
உறவில் உறைந்தவர்கள்
பலரின்
உள்ளங்களில் வாழ்கிறார்கள்…
உறவைத் துறந்தவர்கள்
தங்களின்
உள்ளத்தை தொலைக்கிறார்கள்…
தான் என்ற தலைக்கணம்
தரையிறங்கினால்
நாம் என்ற ஒற்றுமை
தலை சிறக்கும்…!